Friday, July 10, 2009

சலனம் :

நல்லாசிரியர் விருதுவிழா தாமதமாகிறது.மனதுக்குள் சலனத்துடன் அவர்.மகனின் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Monday, June 29, 2009

அவரவர் கவலை

கடுமையான வறட்சி.குடி தண்ணீருக்கும் கூட தட்டுப்பாடு நிலவும் சூழல்.
'என்னதான் செய்யலாம்?' கவலை கலந்த முகத்தோடு பால்க்காரன்.

Saturday, June 27, 2009

உடற்பயிற்சி :

நான்காவது தளம்.நடைப் பயிற்சிக்கு தாமதமாகிவிட்டது.அவசரமாய்க் கிளமபி
வாசல் வந்தவன் அதிர்ந்துபோய் நிற்கிறேன்.லிப்ட் வேலை செய்யவில்லை !

ரகசியம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்.ரகசியங்கள் பாதுகாப்பதில் சிறந்தவன் அவன்.விசிட்டிங் கார்டு வாங்கி இருந்தேன்.இப்போதுதான் கவனிக்கிறேன்.
அது வெள்ளையாய் இருந்தது ! (அ)அதில் ஒன்றுமே இல்லை !.

Monday, March 2, 2009

வாழ்க்கையின் புதிய தத்துவம்:

ஒருவன் தன் மனைவிக்காக பாசத்தோடு
கார் கதவைத் திறந்து விடுகிறான் என்றால்

ஒன்று
புதுமனைவி என்று அர்த்தம்!
அல்லது
கார் புதியது என்று அர்த்தம்!!

(??????????????????????)

கவரிமான் சாதி நாங்கள்!:

பள்ளிக்கூடம்
தேர்வுக் கூட்டத்தில் எனக்கு முன்னால் காமேஷ்_ம்,பின்னால் இளங்கோ_ம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள்
தேர்வு எழுதி முடித்து எல்லோரும் வெளியே வருகிறோம்

நான் :பரிட்ச்சை எப்படிடா எழுதி இருக்கீங்க?

காமேஷ் :எனக்கு ஒன்னுமே தெரியலடா அதனால எதுவும் எழுதாம
வெறும் வெள்ளைப் பேப்பரராவே கொடுத்திட்டேன்

இளங்கோ :நானும் தான்,வெறும் பேப்பரைத் தான் கொடுத்திருக்கேன்

நான் :அடப்பாவிகளா!,
என்னடா இப்ப்படி செஞ்சிட்டீங்க,
ஒருகேள்விக்கு பதில் எழுதக்கூட துப்பில்லையா உங்களுக்கு?
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட புத்தியே இல்லையா
இப்போ டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க
நான் உங்களப் பாத்து பிட்டு அடிச்சேன்னு நினைக்கமாட்டாங்களா?

கசக்கும் உண்மை :

வாழ்க்கையில் நாம் எல்லோருமே
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்

இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?

உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்


பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.


காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி

இது தன்னடக்கம்:

ஒரு விசியம் தெரியுமா????
நேத்து நான் ஹோட்டலுக்கு ஒரு டீ சாப்புடலாமேன்னு போயிருந்தேன்.
ஆர்டரு பண்ணிட்டு திரும்புறேன், பக்கத்து டேபுள்ல அழகான ஒரு ஹீரோ.
ஆகா.,
ஆட்டோகிராப் வாங்கீரலாமேன்னு
அவர் பக்கதுல போய் பார்த்தா......

ஓ !! காட் !!! .

அது கண்ணாடி..

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.....

Sunday, March 1, 2009

பாக்கலயா?,கேக்கலயா?

எனக்க்குப் பேரு கேக்கல
உனக்குப் பேரு பாக்கல

ஒருநாள்:
பாக்கல சொன்னத கேக்கல கேக்கல
கேக்கல சொன்னத பாக்கல பாக்கல

பாக்கல சொன்னத ஏன் கேக்கலன்னு
கேக்கல கிட்ட பாக்கல கேக்கல
கேக்கல சொன்னத ஏன் பாக்கலன்னு
பாக்கல கிட்ட் கேக்கல கேக்கல

மொத்தத்துல
பாக்கல கேக்கல
கேக்கல பாக்கல

அவ்வளவுதான்,அவ்வளவுதான்
முடிஞ்சி போச்சி

Friday, February 13, 2009

இதுதான் உலகம்..!

தீவிரவாதிகள் தொலை பேசியில் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
"நூறு கோடி மக்களையும் ஒரு கழுதையையும் கொல்லவேண்டும்"

இடைமறித்து கேட்ட உளவாளி ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான்
"ஏன் கழுதையைக் கொல்ல வேண்டும்?"

தீவிரவாதியின் பதில் :
நான் தான் சொன்னேனே! அவர்கள் மனிதர்களப் பற்றி கவலைபட மாட்டார்கள் என்று!!

ஹிட்லரைத் தொடர்ந்து வா..

"IF YOU LEARN FROM YOUR MISTAKE,YOU ARE INTELIGENT
BUT IF YOU LEARN FROM SOMEBODY'S MISTAKE,THEN YOU ARE A GENIUS"
--ADOLF HITLER

Sunday, February 1, 2009

சரியான போட்டி...!!

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்"

காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்"

அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: "இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்"

நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:"சபாஷ்! சரியான போட்டி!!"