Monday, March 2, 2009

வாழ்க்கையின் புதிய தத்துவம்:

ஒருவன் தன் மனைவிக்காக பாசத்தோடு
கார் கதவைத் திறந்து விடுகிறான் என்றால்

ஒன்று
புதுமனைவி என்று அர்த்தம்!
அல்லது
கார் புதியது என்று அர்த்தம்!!

(??????????????????????)

கவரிமான் சாதி நாங்கள்!:

பள்ளிக்கூடம்
தேர்வுக் கூட்டத்தில் எனக்கு முன்னால் காமேஷ்_ம்,பின்னால் இளங்கோ_ம் அமர்ந்து தேர்வு எழுதுகிறார்கள்
தேர்வு எழுதி முடித்து எல்லோரும் வெளியே வருகிறோம்

நான் :பரிட்ச்சை எப்படிடா எழுதி இருக்கீங்க?

காமேஷ் :எனக்கு ஒன்னுமே தெரியலடா அதனால எதுவும் எழுதாம
வெறும் வெள்ளைப் பேப்பரராவே கொடுத்திட்டேன்

இளங்கோ :நானும் தான்,வெறும் பேப்பரைத் தான் கொடுத்திருக்கேன்

நான் :அடப்பாவிகளா!,
என்னடா இப்ப்படி செஞ்சிட்டீங்க,
ஒருகேள்விக்கு பதில் எழுதக்கூட துப்பில்லையா உங்களுக்கு?
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட புத்தியே இல்லையா
இப்போ டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க
நான் உங்களப் பாத்து பிட்டு அடிச்சேன்னு நினைக்கமாட்டாங்களா?

கசக்கும் உண்மை :

வாழ்க்கையில் நாம் எல்லோருமே
என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும்
ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது)
இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம்/ஆக்கப் படுகிறோம்

இதுதான் உண்மை !
இல்லை என்று மறுப்பவரா நீங்கள்?
இதில் உறுதியாக இருக்கமுடியுமா உங்களால்?

உங்களை ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும்


பதிவின் முடிவில் உங்களின் நிலை நினைத்தால் ??????????????




என்னதான் புத்திசாலியா இருந்தாலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.


காலைல பல்லு வெளக்குற நேரம் (BRUSH பண்ற நேரம்)
அந்த ஒரு நிமிடம்
நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹி

இது தன்னடக்கம்:

ஒரு விசியம் தெரியுமா????
நேத்து நான் ஹோட்டலுக்கு ஒரு டீ சாப்புடலாமேன்னு போயிருந்தேன்.
ஆர்டரு பண்ணிட்டு திரும்புறேன், பக்கத்து டேபுள்ல அழகான ஒரு ஹீரோ.
ஆகா.,
ஆட்டோகிராப் வாங்கீரலாமேன்னு
அவர் பக்கதுல போய் பார்த்தா......

ஓ !! காட் !!! .

அது கண்ணாடி..

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.....

Sunday, March 1, 2009

பாக்கலயா?,கேக்கலயா?

எனக்க்குப் பேரு கேக்கல
உனக்குப் பேரு பாக்கல

ஒருநாள்:
பாக்கல சொன்னத கேக்கல கேக்கல
கேக்கல சொன்னத பாக்கல பாக்கல

பாக்கல சொன்னத ஏன் கேக்கலன்னு
கேக்கல கிட்ட பாக்கல கேக்கல
கேக்கல சொன்னத ஏன் பாக்கலன்னு
பாக்கல கிட்ட் கேக்கல கேக்கல

மொத்தத்துல
பாக்கல கேக்கல
கேக்கல பாக்கல

அவ்வளவுதான்,அவ்வளவுதான்
முடிஞ்சி போச்சி